பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



கைகள் கனக்க பிடித்துக் கொண்டார். அழகு நிலையத்தின் உரிமையாளர் முகத்தில் அசடு வழிந்தது. ‘என்னங்க இது’ என்று குழைந்தார். ‘இது உனக்காகத்தான். எடுத்துக்கோ’ என்றார் முதியவர். ‘எதுக்குங்கு’ என்று பேச ஆரம்பித்தபோது, ஆனந்தராஜுக்குப் பேச்சே வரவில்லை. தொண்டையில் ஏதோ பந்து அடைத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

சமாளித்துக் கொண்டு புறப்பட்டார் ஆனந்தராஜ். முதலில் நடை ஆமையாயிற்று. மனம் ஊமையாயிற்று. வீடு நெருங்க நெருங்க நடை முயல் வேகமாயிற்று. இதில் எவ்வளவு இருக்கும்? என்ற கேள்வி, மனதில் தேள் கடித்த குரங்கு போல குதித்துக் கொண்டேயிருந்தது. வீட்டிற்குள் சென்றதும் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே போனார்.

கைகள் மின்னல் வேகத்தில் நாணயங்களை எண்ணத் தொடங்கின. வெறும் பத்துப் பைசா, நாலணா நாணயங்களைப் பார்த்துக் கொண்டிருந்த கைகள், வெள்ளி நாணயங்களின்மேல் விளையாடிக் கொண்டிருந்தன. எண்ணிப் பார்த்தார். 199 ரூபாய். அடேயப்பா! இவ்வளவு ரூபாயா! கஞ்சன் எப்பொழுது கர்ணன் ஆனான்!

199 என்ற எண் மனதிலே பூதாகரமாக உருவெடுத்து, நிறைந்து கொண்டது. இன்னும் ஒரு ரூபாய் இருந்தால் 200 ரூபாய் ஆகிவிடுமே என்ற நினைவு முளையிட்டுக் கொண்டது. இருந்த 1 ரூபாயைப் போட்டுப் பார்த்தார். 200ஆகி விட்டது. இன்னும் பத்து ரூபாய் என்றால் என்று