பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

27


அடுத்த நினைவு. தினந்தினம் வந்ததையெல்லாம் போட்டு சேர்க்க ஆரம்பித்தார். ஆறுமாதம் ஆயிற்று! ஆனந்தராஜ் வாழ்வில் அப்படி ஒரு திருப்பம்.

மறுமுறை முதியவர் அழகு நிலையத்திற்கு வந்தார். ஆறுமாதம் கழித்துதான். ஆனந்தராஜ் எங்கே என்று, கத்தியும் கையுமாக நின்றவரைக் கேட்டார். ‘நான்தாங்க’ என்ற பதில் வந்தது. கிழிந்த கந்தல் உடை. எண்ணெய் இடாத தலைமுடி. தாடி மீசை, என்னப்பா இது என்றார்! எல்லாம் நீங்க போட்ட பிச்சைங்க. ஒரு ஆயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு! ஒரு வீடு வாங்கணும்னு, நிலம் வாங்கணும்னு வீட்டில மனைவி சொல்றா! என்று பணப்பேச்சில் மணியடித்துக் கொண்டிருந்தார்.

ஊதுவத்தி மணம் இல்லை. கடையில் பளபளப்பு இல்லை, பணத்திற்கு அடிமையான ஆனந்தராஜ் தன்னைக் கவனித்துக் கொள்ளாததால் நோய்க்கு அடிமையானார். காசு காசாகச் சேர்ந்தது, கூடவே நோயும் கவலைகளும் சேர்ந்துகொண்டன. ஆனந்தராஜுக்குப் புரிந்தாலும் அவரால் பண ஆசையிலிருந்து மீளவே முடியவில்லை.

ஆசைக்கு அடிமைப் பட்ட ஆனந்தராஜ், அறியாமையில் வீழ்ந்தார். அறிவினை இழந்தார். ஆரோக்கிய வாழ்வினையும் மறந்தார். இறுதியாக, நோயாளியாகி நொந்து நைந்தார். காரணம், ஆசையெனும் பொய் நோய் அவரை அல்லோலகல்லோலப் படுத்தி விட்டதுதான்.

கொஞ்ச நேரம் தன்னை நினைத்து, தன்நிலையை மதித்து, தன் தகுதியை யோசித்து வாழ்ந்து வந்திருந்-