பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


முடியவில்லை. முடிவில், திருடினால்தான் மனம் மகிழும் என்ற முடிவுக்கும் வந்து, திருடுவது என்றும் துணிந்து விட்டான்.

வழக்கமான அன்றாடப்பணி முடிந்து, வீடு திரும்பும் வேளையில் ‘தன் தொழிலைத்’ தொடங்கி விடுவது என்று முடிவுக்கு வந்தான். அரண்மனையை விட்டு வெளியே செல்லும் பொழுது, காவலர்கள் அவனை பரிசோதனை போடுவது இல்லை. ஏனென்றால், அவன் அரசருடன் நெருங்கிய தொடர்பு உடையவனாக பதவியிருந்ததே காரணம்.

ஓர் அறைக்குச் சென்று, ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிக் கொண்டு, சுற்றுமுற்றும் பார்த்தபடி வெளியே வந்தான். நல்ல வேளை; யாரும் பார்க்கவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டான். முதல் நாளே மாட்டிக் கொள்ளக்கூடாதல்லவா!

அதைத் தன் அங்கிக்குள் மறைத்துக் கொண்டு வெளியே வந்தான். வாயிற் காவலர்கள் வணக்கம் செய்து வழியனுப்பி வைத்தார்கள். ‘வெற்றியோ வெற்றி’ என்று ஆசைமனம் கூவிக் கொண்டாட்டம் போட்டது. கால்கள் விரைந்து நடந்தன. வீட்டிற்கு வந்ததும் யாருக்கும் தெரியாமல் ஒரு அறைக்குள் போனான். சுற்றுமுற்றும் பார்த்து, தான் எடுத்துக் கொண்டு வந்ததை பத்திரப்படுத்தி வைத்தான். நீண்ட பெருமூச்சு வெளியே வந்தது.

அரண்மனையில் இருந்து திருடி வருவது மிகவும் எளிது என்பது இப்பொழுது அவனுக்குப் புரிந்து போயிற்று. இனிமேல் இப்படியே செய்தால், ‘மனமும்