பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

31


மகிழ்ச்சியடையும், மாட்டிக்கொள்ளவும் மாட்டோம்’ என்று எண்ணிக் கொண்டான். திருட்டு வேலை தினமும் திவ்யமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது.

மகனைப் பற்றி எந்தவிதமான அவக்கேடான செய்தியும் வரவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த தந்தைக்கு, மடிமீது இடி விழுந்ததைப் போல செய்தி ஒன்று வந்தது.

தினமும் எதையோ மறைத்துக் கொண்டு எடுத்துப் போகிறான் என்ற ஓர் சந்தேகம், வாயிற் காவலர்களுக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது.

என்றாலும், நேரடியாகக் கேட்க முடியாத சூழ்நிலை, என்னவென்று கேட்டு, ஒன்றும் இல்லாமல் போய் விட்டால், இராஜகோபத்திற்கு ஆளாக நேரிடுமே! அதற்காக ‘அவனை’ கண்காணிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் சந்தேகம் சரியானதுதான் என்று உறுதி பட்டதும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரசனிடம் போய்க் கூறிவிட்டார்கள்.

‘எல்லாக் கலைகளிலும் வல்லவனாகவும், சிறந்த இராஜ தந்திரியாகவும் விளங்குகின்ற அவனா திருடுகிறான்! என்று முதலில் ஐயப்பட்டான் அரசன். பிறகு இப்படியும் இருக்குமா என்று வேதனைப்பட்டான். முடிவில் தானே சோதனை செய்து விடுவது என்றும் அவன் துணிந்து விட்டான்.

வழக்கம் போல அவன் திருடி மூட்டைக் கட்டிக் கொண்டு சென்றவுடன், ஒரு கிராமத்தான்போல மன்னன் மாறு வேடம் அணிந்து கொண்டு பின் தொடர்ந்தான். அவன் வீட்டிற்குள் சென்று அந்த மூட்டையை வெளியே