பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மெதுவாக எடுக்கும் பொழுது, கையைப் பிடித்துக் கொண்டான் மன்னன். கையும் களவுமாகப் பிடித்து விட்டான் மன்னன் என்றதும், அவன் துடித்துப் போனான். திருடிய பொருட்களை எல்லாம் எங்கே பதுக்கி வைத்திருக்கிறாய்? எத்தனை நாளாய் இது நடக்கிறது என்று அரசன் அதட்டவே, அச்சத்தால் நடுங்கிப் போய், அரசனைப் பார்த்தான் அவன்.

‘நான் திருடவே இல்லை. திருடவே இல்லை’ என்று அவன் கூறினாலும், யார் நம்புவார்? கையும் களவுமாக அல்லவா பிடிபட்டிருக்கிறான்!

அந்த அறைக்குள்தானே மறைத்து வைத்திருக்கிறாய்! கதவைத் திறக்கிறாயா? அல்லது பூட்டை உடைத்து என்று அரசன் பேசி முடிப்பதற்குள், தான் மறைத்து வைத்திருத்த மூட்டையை ஒரு மேடையின் மேல் வைத்தான்.

அரசன் கண்ணசைவைப் புரிந்து கொண்டு அங்கு இருந்த சேவகன், மூட்டையை அவிழ்த்தான்.

எல்லோருக்கும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அரசனைவிட, அவனைப் பெற்ற தந்தையான அரண்மனை ஜோதிடருக்குத்தான் அதிக ஆச்சரியமாக இருந்தது. அந்த மூட்டைக்குள்ளே பொன்னும் மணியும் இருக்கும் என்றல்லவா நினைத்தார்கள்? அதற்கு மாறாக அங்கே இருந்தது மண். ஆமாம்! அந்த மூட்டை மண்மூட்டையாக இருந்தது.

மண்ணையா திருடிக் கொண்டு வந்தாய் என்றான் மன்னன்! ஆமாம் மன்னா! வேறு என்ன செய்வது!