பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தட்டிக் கொண்டு இருந்தன. சாமிநாதனின் அன்பும், பணிவு கலந்த சொற்களும் சேர்ந்து கொள்ளும் போது, உலகநாதன் சில சமயங்களில் தடுமாறிப் போவதுண்டு. மதிமாறிப் போவது உண்டு. புதுப் பணக்காரன், வேலை செய்யாத உடல். சோம்பேறித்தனம். சொகுசாக உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்தன.

சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்பார்களே! அதுபோல, கையில் இருந்த பணத்தை மறந்து, இல்லாத கிடைக்காத இன்பத்திற்கு ஏமாந்து அலைய ஆரம்பித்தான். எண்ணங்கள் பலப்பல என்றால், இரவிலே இன்னுமல்லவா ஏறும்? பலன்! தூக்கமில்லாத இரவுகள். அவனைத் தூங்கவைக்க சாமிநாதன் சொன்ன யோசனை. தந்த மருந்து-அவனை சொர்க்கத்திற்கே இட்டுச் சென்றன.

புது வழக்கம், மதுப் பழக்கம்-புதுப்புது உறவுகளைக் கூட்டி வந்தது. தீய நண்பர்கள் அவனுக்குத் தேனுக்கும் மேலாக இனித்தார்கள். வந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருந்தது. பணம் போவதைப் பற்றி மனம் வருந்தவில்லை. பணம் கரைகின்றதே என்று திருந்தவும் இல்லை. குடும்பம் குழந்தைகள் கதறுவதைக் கேட்கவும் அவன் மனம் இடந்தரவில்லை.

ஊரில் இருந்த நற்பெயர் ஓடி ஒளிந்து, ஒழிந்து கொண்டிருந்தது. வீட்டில் இருந்த நிம்மதி விடை பெற்றுப் போயே விட்டது. உலநாதன் பெயரில் உறவாடிக் கொண்டிருந்த நிலபுலன்கள், மாற்றான்