பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இனிப்புக்களின் பெயரைச் சொல்லி, கைநிறைய காசுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

மருமகன் கனகசுந்தரம் வந்தான், அவனிடமும் செங்கரும்பின் சுவையைப்பற்றி ஒரு கதாகாலட்சேபமே பண்ணி வைத்தாள் தங்கம். ‘உங்களுக்குப் பிடித்தது எனக்கும் பிடிக்கும். ‘உங்களுக்கு நிறைய வாங்கி வருகிறேன்’ என்று வணக்கம் செய்துவிட்டு, தன் மனைவியுடன் புறப்பட்டான் கனகசுந்தரம். தன் மனைவி தன்கூட திருவிழாவிற்கு வருகிறாள் என்பதிலே அவனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.

திருவிழாக் கூட்டத்தில் இருவரும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அலமுவின் கண்கள் செங்கரும்பு வண்டியையே சுற்றிச் சுழன்று ஆலவட்டம் போட்டுக் கொண்டிருந்தன. கனகசுந்தரத்தின் கண்கள் மற்றொரு புறத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்தன. அவன் மூக்கு இப்பொழுது துடிக்க ஆரம்பித்து விட்டது. ஆமாம்! எள் புண்ணாக்கை வெல்லம் போட்டு வேகவைக்கின்ற வாசனை, கனகசுந்தரத்தின் மூக்கினும் நுழைந்து, அவனைக் கரகரவென்று கையைப் பிடித்து இழுப்பது போல கவர்ச்சி செய்து கொண்டிருந்தது.

செங்கரும்பை எப்படி வாங்கலாம் என்று அலமு நினைத்துக் கொண்டிருக்கும்போதே நைசாக நழுவிச் சென்று, கனகசுந்தரம் புண்ணாக்கை கைநிறைய வாங்கிக் கொண்டு தின்னத் தொடங்கிவிட்டான். திரும்பிப் பார்த்த அலமுக்குத் திகீர் என்றது. ஓடோடி வந்து கணவன் முதுகைத் தொட்டு அழைத்து, முகத்தைப் பார்த்தாள். கணவன் கனகசுந்தரத்தின் வாய், வானவில்லின் வர்ண