பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

47



ரோட்டின் குறுக்கே கங்காதரன் போய்க் கொண்டிருந்தான். காரைக் கொடுத்துவிட்டு கால்நடையாக அவன் செல்கிறான். அடிக்கடி ஓசி வாங்கும் வனிதாமணி, அவனைப் பார்த்து பரிகாசமாகப் பேசிக்கொண்டே காரை ஓட்டுகிறாள். மாதர் சங்கத் தலைவியான இவளுக்கு, இன்று முக்கியமான கூட்டம். ஆகவே, கொஞ்சம் சீக்கிரம் போனால் நன்றாக இருக்கும். வந்திருக்கும் உறுப்பினர்களே தம் வலைக்குள் மாட்டி வைக்க வசதியாக இருக்கும் என்று பாலாம்பாள் விரைவுபடுத்துகிறாள்.

‘என்னை மிஞ்சி யாரும் போகமாட்டார்கள். இட்ட கோட்டைத் தாண்டிப் போக யாருக்குத் தைரியம் உண்டு என்று தன் சுய புராணம் என்ற பல்லவியை வனிதாமணித் தொடங்கியதும், அனுபல்லவியாக பாலாம்பாள் ஆரம்பித்து விட்டாள்.

இருவரின் முகத்திலும் இனம் புரியாத இன்பம், கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.

ஒருவர் முதுகில் ஒருவர் பெருமையாகத் தட்டிக் கொண்டிருக்கும் பொழுது, எதிரே ஒரு எருமைமாடு குறுக்கே வந்து விட்டது. அதை ஓரம் போகவிட்டு காரை திருப்பப் பார்த்தால், வயதான ஆயா ஒருத்தி சுற்றிலும் பத்துக் குழந்தைகளுடன், ரோட்டைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

பெருமையாகத் தன்னைப் பற்றிய பேசிக் கொண்டே வந்துவிட்டதால், திடீர் என்று பிரேக் போட முடியவில்லை. அவசர அவசரமாகக் காரைத் திருப்ப முயற்சித்தபொழுது, கார் அவளது கட்டுப்பாட்டை மீறி சாலையின் ஓரத்திற்குப் போய், அங்கிருந்த மின்