பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இருவரும் ஒருநாள் சுற்றுலா செல்கின்றார்கள். இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க வேண்டும் என்பது சிதம்பரத்திற்கு ஆசை. அவர்கள் பட்டண சவகாசமே அறியாத பட்டிக்காடு ஒன்றுக்குப் போக வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு புறப்படுகின்றனர். அந்த குக்கிராமத்தை அடைந்து, அதனைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் நல்ல உச்சி வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது. வெளியில் அனலாக வெயில் காய்வது போலவே, வயிற்றின் உள்ளேயும் பசி தனலாகக் காய்ந்து கொண்டிருந்தது.

எங்கேயாவது எதையாவது வாங்கிச் சாப்பிட்டால் தான், மேலும் நடக்க முடியும் என்ற நினைவில் உடல் தள்ளாடும் போது, எதிரே மாந்தோப்பு ஒன்று தெரிகிறது. சுற்றிலும், வேலியிட்டுப் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்ற தோப்பு அது. வாசலில் ஒரு கிழவன் நிற்கிறான். தோப்புக்குரிய காவலாளி அவன்.

இருவரின் முகத்தைப் பார்த்து பசித்து வருகின்றார்கள் என்று புரிந்து கொள்கிறான் கிழவன். ‘எங்களுக்கு உதவுங்கள்’ என்று இருவரின் வேண்டுகோளுக்கு அவனும் ஒத்துக் கொள்கிறான், ‘உங்கள் பசியாற நான் உதவுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை’ என்று அவன் உதவிட சம்மதிக்கிறான். பசியாயிற்றே! எந்த நிபந்தனைக்கும் தயார் என்கின்றனர் இருவரும்.

தோப்புக்குள்ளே இல்லாத பழவகைகள் இல்லை என்றே சொல்லிவிடலாம். உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதனால், உங்களுக்குப் பத்து