பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


திகம்பரம், எதிரே தென்பட்டவைகளில் தனக்கு விருப்பமான பழங்களைப் பறித்தான். சாப்பிட்டான். பசியாறினான். மகிழ்ந்தான். அங்கு அசைந்தாடிய மலர்களைப் பார்த்து ரசித்தான். இயற்கையின் இனிய காட்சியில் திளைத்தான் இறைவனுக்கு நன்றி கூறினான். உபசரித்த கிழவன் இருந்த திசை நோக்கி, வணக்கம் செலுத்தினான், அதற்குள் நேரம் முடிந்தது. வெளியே வந்து விட்டான்.

ஆனால் சிதம்பரமோ, பழங்களை எல்லாம் குறை என்று ஒதுக்கினான். இன்னும் கொஞ்ச தூரம் போனால், பழுத்த பழங்கள், சுவையான பழங்கள் கிடைக்கும் என்று. அவசரப்பட்டான். நிராகரித்தான். எதையும் ஏற்றுக்கொள்ள, எடுத்துக்கொள்ள அவனது குறை காணும் மனம் இடந்தரவில்லை. நல்லது எது என்று முடிவெடுப்பதற்குள்ளாக நேரம் கழிந்து போனது. காவாலாளி குரல் கேட்டு வெளியே வந்தான். ஐயோ பாவம் சிதம்பரம்!

இப்படித்தான் சிதம்பரங்களாக மக்கள் இருக்கின்றார்கள். அந்த அழகானத் தோட்டம் என்பது இயற்கை அழகு நிறைந்த இனிய கனிகள் மிகுந்த நாம் வாழும் உலகமாகும். பத்து நிமிடம் என்று நிர்ணயிக்கப்பட்ட நேரம்தான் நமது வாழ்க்கைக் காலமாகும். காவலாளி தான் நம்மைக் காக்கும் இறைவனாகும்.

நமக்கு வாழ அனுமதிக்கப்பட்டக் காலவரையறைக்குள் திகம்பரம் போல, சந்தோஷமாக வாழ்ந்து செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் கட்டளை. எதையும் வெறுப்புடன் பார்த்து, எரிச்சலுடன் வாழ்பவர்கள் பொய் நோய்க்கு ஆளாகி, துன்பப் புதைச் சேற்றில் நிமிடத்துக்கு