பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



நிம்மதியான வாழ்வைவிட இந்த உலகில் வேறு நிலையான செல்வம் இல்லை. அவர்களே பெரிய செல்வந்தர்கள் ஆவார்கள். நீங்களும் செல்வந்தர் ஆகலாம். முயலுங்கள். நிச்சயம் வரலாம். பெறலாம்!

நோயில்லாமல் வாழ்வதுதான் வாழ்வின் லட்சியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். நம்மையறியாமல் நாம் பொய் நோய்களில் வீழ்ந்து விட்டு, மேலேறி வரமுடியாமல் திணறியிருக்கிறோம். என்பதையும் அறிந்திருக்கிறோம்.

என்றாலும், நம்மால் பொய் நோய்களைத் தவிர்க்க முடியவில்லை தடுக்க முடிவதில்லை. தைரியமாக இருக்க, வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாலும் கூட, தக்க சமயத்தில் தைரியம் கைவிட்டு விடுவதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்.

அறிந்ததை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை? செயல்படுத்த முடியவில்லை? பொய் நோய்களை புறமுதுகிட்டு ஓடும்படி ஏன் செய்ய முடியவில்லை?

அதற்குச் சரியான விளக்கம் வேண்டுமென்றால் நாம் தான் உண்மையான காரணமாகும். ஓட்டுபவனைப் பார்த்த பிறகே குதிரை ஒழுங்காக ஓடும் என்பார்கள். இல்லையேல் குதிரையின் சண்டித்தனம் கொடுமையாக இருக்கும் என்று கூறுவார்கள் அனுபவசாலிகள்.

வண்டிக்காரனின் கயிறு இழுக்கும் வலிமையைக் கண்டுதான் வண்டிமாடும் ஒழுங்காக இழுக்கும் என்பார்கள். வண்டிக்காரன் சரியில்லை என்றால், வழியிலே படுத்துக் கொண்டு, வழக்காடும் அந்த