பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

63


2. எதிரும் புதிரும்

எதிர் வருவது என்னவென்றே தெரியாத புதிர் நிலையில்தான் நமது வாழ்க்கை நாள்தோறும் நகர்ந்துகொண்டு போகிறது. நம்மையறியாமலேயே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நம் கண்முன்னே நமக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகள் நடந்தாலும், அதனைதவிர்க்கவோ தடுக்கவோ முடியாமல் தடுமாறுகின்றோம்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்பொழுது, படுகின்ற துன்ப வேதனைகள் தொடர்கதையாவதும் உண்டு. சில நேரங்களில், வாழ்க்கையே விடுகதை போல, விண்மீன்களின் வண்ண ஜாலம் போல வடிவெடுத்து வளைத்துக் கொள்வதும் உண்டு. ஆகவே, தனி மனிதன் ஒருவனின் வாழ்க்கையானது, இந்தத் தரணியில் வாழ்கின்ற எதிர் நீச்சல் சாதனைதான்.

அதனால்தான் வாழ்க்கையை வீரம் நிறைந்தது, விவேகம் செறிந்தது, விநயம் மிகுந்தது என்று கூறுகின்றார்கள். இருட்டிலே கருப்புப் பூனையைத் தேடுவதுபோன்ற தன்மையில்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைவதால், வாழ்க்கையை எதிர்பார்ப்பதும், எதிர் நோக்கி சமாளிப்பதும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

அவ்வாறு புதிர் நிறைந்த வாழ்க்கையை பெருமையுடன் வென்று, பேரின்ப சரித்திரத்தை ஒருவன் படைத்திட வேண்டுமென்றால், அவனுக்குத் தேவை, நலமான தேகம்தான். பணத்தை வைத்துக்கொண்டு படையைக் கூட்டி புதிர்களை வென்றுவிடலாம் என்று