பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

65


செல்வம் உள்ளவன் மனம், திண்மை நிறைந்ததாக திறம் உள்ளதாக, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உடையதாக விளங்குகிறது. அதிலும் உடல் நலமான உயர்ந்த செல்வத்தை உடையவனுக்கோ, இன்னும் திருப்திமிக்க வாழ்க்கை வாழ்வதற்கான சகலவிதமான சக்தியையும் கொடுக்கிறது என்பதை வரலாற்று நிகழ்ச்சிகள் வடித்துக் காட்டும் உண்மைகளாகும்.

இவ்வாறு ஒரு தனிமனிதன் மகிழ்ச்சிகரமாக தனது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றால், அவன் உலகில் தினந்தினம் எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேற வேண்டும், என்று முன்னமே கூறியிருந்தோம். அவனை எதிர் நோக்கிப் புதிர் போடும் பிரச்சினைகளை நாம் மூன்று வகைகளாகப் பிரித்துக் காட்டலாம்.

1. உடலால் அவன் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள்.

2. உயிரினங்களால் அவன் எதிர்நோக்கும் விவகாரங்கள்.

3. சமூக சூழ்நிலை அவனை ஒருமுகப்படுத்திடும் குழப்பங்கள் என்று அவன் மும்முனைத் தாக்குதல்களுக்கு அன்றாடம் ஆளாகும்பொழுது, அவனது நிலை எப்படி இருக்கும்?

வெயிலும் மழையும், பனியும் குளிரும், புயலும் புனலும், போன்ற இயற்கை சாதனங்கள் இழைக்கின்ற தன்மைகள், மனிதனுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம், குடிநீர் போன்றவைகள்,