பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கட்டிடங்கள், நவீன சாதனங்கள், அதனால் விளையும் தீமைகள் போன்றவற்றுடன் அவன் போராட வேண்டியிருக்கிறது.

மனிதனைச் சுற்றியுள்ள விலங்கினங்கள், மற்றும் உயிரினங்கள், செடி கொடி வகைகள், நோய்க்காளாக்கும் நுண்கிருமிகள், சுற்றிச் சுற்றி வந்து துயர் கொடுப்பதையும் மனிதன் சமாளிக்க வேண்டியிருக்கிறதே!

அத்துடன் நில்லாது, சமுதாய அமைப்பு என்று ஒன்று இருந்து கொண்டு, அவனைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறதே! சமுதாய மரபுகள், கொள்கைகள், நம்பிக்கைகள், பண்பாட்டு பழக்க வழக்கங்கள், இப்படித் தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், முள்வேலியிட்டு மடக்கும் முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் மனிதன் உடன்பட்டு, எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கிறதே!

ஆமாம்! மனிதன் இந்த மும்முனைத் தாக்குதல்களை சமாளித்து வாழவே முற்படுகிறான். அதற்கு முதல் தேவை அனுசரித்துப் போகும் குணம் (Adjustment). அத்தகைய அருங்குணத்திற்கு மூலதனமாக அமைவது புத்திசாலித்தனம்! இந்தப் புத்திசாலித்தனம் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா?