பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



‘நம்மால் நடப்பது ஒன்றுமில்லை, எல்லாம் நாயகன் செயல்’ என்ற ஞானநிலை கொள்வதுபோல, எது வந்தாலும் வரட்டும். முடிந்தவரை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று எதையும் தாங்க முடிக்கின்ற, முயல்கின்ற மனநிலையுடன் இருத்தல்.

இன்னதென்றே புரியாமல், இதயம் படக் படக்கென்று அடித்துக் கொள்ள, எப்படி நான் வாழப்போகிறேனோ எனத் துடித்துத் துவண்டு, பேசாமல் தன்னை அடக்கவும், தன் மனக்குரங்கைத் தாவ விடாமல் ‘சற்றே இரும்பிள்ளாய்’ என்பது போல இருந்து சாந்த நிலையில் செயல்படுதல்.

‘நமக்கு நோய் ஏதாவது இருக்குமோ? வரக்கூடிய ஒரு நோய்க்கு இதுதான் முதல் படியோ’ என்று எதற்கெடுத்தாலும் கற்பனை நோயுடன் கரடிப்பிடியாய் பிடித்துக் கொண்டு, காகமாய் கரைந்து, கழுதையாய் புரண்டு கவலைப்படாமல், ‘நமக்கேன் நோய் வருகிறது’ என்ற திடமனதுடன், ‘தீர்க்கமான நம்பிக்கையுடன், அப்படியே உடலில் வலி இருந்தாலும் கூட, இதோ, இன்னும் கொஞ்ச நேரத்தில் அதுவாக நம்மைவிட்டு விலகிப் போய்விடும் என்று சுக நிலையில் சுகம் கண்டு சுகம் நிறைந்து வாழுதல்.

எதையும் முழுமனதுடன் செயல்படுதல், அதாவது அரைகுறை மனமோ அரைகுறை காரியமோ அன்றி. எடுத்த காரியத்தைத் தொடுத்து முடித்தல்.

தேவையில்லாத திருப்பங்கள் நம் வாழ்க்கையில் ஏதாவது நேர்ந்து, அதனால் நமது தேகமும். வாழ்க்கை