பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



பழக்கங்கள் எல்லாம் உடலைத் தூய்மைப் படுத்தவும், வலிமை ஊட்டவும். உற்சாகமாக உல்லாசமாக வாழ்க்கையினை நடத்தவுமே உதவ வேண்டும். நாளுக்கு நாள் உடலை நலிய வைக்கின்ற தன்மையில் கொண்டு செல்லக் கூடாது.

உடலை வளர்க்கின்ற உயர்ந்த பழக்க வழக்கங்கள், ஒருவருக்கு உயர்ந்த ஆளுமையை (Personality) அளிக்கின்றன. அழகான உடல் அமைப்பும், செம்மாந்த தோற்றமும் பெறுவதால், அவர் மற்றவர்களை எளிதாகக் கவர்ந்து விடுகிறார். அந்தக் கவர்ச்சியின் காரணமாக அவர் மேற்கொள்கின்ற முயற்சிகளும் செயல்களும் சோர்வில்லாமல் நடைபெறுகின்றன. நல்ல முழு வெற்றியை நல்குகின்றன. அதனால் வீட்டிலும் சரி வெளியிடங்களிலும் சரி, அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

அவருக்கென்று நல்ல இலட்சியமும் அமைந்துவிடுகிறது. அதனால் அவரது வாழ்க்கையானது தெளிந்த நீரோடையின் சீரான ஓட்டம் போல செல்கிறது. நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நல்ல பயன்களை அளிக்கிறது.

இத்தகைய பயன்களை அளிக்கும் நல்ல பழக்கங்களைக் கற்பது எளிது. ஆனால் பின்பற்றுவதுதான் கடினம். ஏனென்றால் அதற்குத் திடமான மனமும், தீர்க்கத் தரிசனமான குணாதிசயங்களும் தேவை. ஆனால் பலஹீனமான மனம் உள்ள ஒருவரின் முடிவை இங்கே பாருங்கள். அவர் கூறுகின்றார்.

‘நான் படித்த புத்தகங்கள் எல்லாம் புகை குடிப்பதால் பிறக்கும் பெருந்தீங்குகளைப் பற்றியே கூறின. மது