பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

73


அருந்துவதால் உண்டாகும் மகா கேடுகளைப் பற்றியே விவரித்தன. அதிகமாக சாப்பிட்டால், அது வேண்டவே வேண்டாம், மற்றும் உறவுகளைப் பற்றியெல்லாம் தேவையில்லை என்று கூறின. அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்’

அதாவது, இனிமேல் இதுபோன்ற புத்தகங்களையே படிப்பதில்லை என்ற முடிவுதான் அது.

தீமைகள் தோன்றுகின்றன என்று தெரிந்தாலும், தீயப் பழக்கங்களில் இருந்து விடுபட முடிவதில்லை. நன்மைகளையே நாளெல்லாம் நல்குகின்றன என்றாலும், நல்ல பழக்கங்களைத் தொடர முடிவதில்லை என்ற உண்மையைத்தானே இக்குறிப்பு எடுத்துக் காட்டுகிறது!

‘திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பது போல, தனது நலத்திற்கும் சுகத்திற்கும் அக்கரை காட்டாத யாரும், பிறர் சொல்லைக் கேட்கவா போகின்றார்கள்? என்றாலும் நல்ல பழக்கங்களை உண்டு பண்ண விரும்புகின்ற யாரையும் யாரும் தடுத்து விடவோ, கெடுத்து விடவோ முடியாது. அத்தகைய நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள விரும்பும் ஒருவருக்குத் தேவையான மனோநிலையை கீழே தந்திருக்கிறோம்.

1. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பதைவிட, சுகச் செல்வம் என்று எண்ணுகின்ற இனிய மனம் வேண்டும்.

2. தன்னால் நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். தன்னைப் பற்றிய சிந்தனையில் உயர்ந்த ஆர்வம் வேண்டும்.