பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஒரு கூடி வாழும் மிருகம்’ என்றுதான் சமூக இயல் வல்லுநர்கள் விளக்குகின்றார்கள்.

ஒருவருடன் ஒருவர் உறவாடி உரையாடிக் களிக்கின்ற, கூடி வாழ்கின்ற நேரத்தில், சுகமான வாழ்க்கை வாழும் ஒருவனையே மக்கள் அங்கீகரிக்கின்றனர். ஆரவாரித்து ஏற்றுக் கொள்கின்றனர். நோயுள்ள மனிதன் பணக்காரனாக இருந்தாலும் அவனை ஓரக் கண்ணால் பார்ப்பதும், நிலைமை சரியானால் அவனை ஒதுக்கி வைத்திடவும் தயங்காத நிலையில்தான் மக்கள் இருக்கின்றனர். நலமாக இருப்பவனையே மனிதன் என்கிறோம். நோய்க்கு அவன் இடங்கொடுத்து விட்டால், நோயாளி என்று தானே அழைக்கிறோம்.

அதனால்தான் ‘நோய்க்கு இடங்கொடேல்’ என்று நமது முன்னோர்கள் அறிவுரை கூறிச் சென்றார்கள். ‘நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்’ என்றார்கள். பணக்காரர்கள் எல்லாம் செல்வம் உள்ளவர்கள் அல்ல. செல்வம் உள்ளவன் என்பவன் நோயில்லாதவனே என்று சீனப் பழமொழி ஒன்று கூறுகிறது.

ஆகவே, நோய்க்கு இடந்தரா. வாழ்க்கையை நாம் வாழ்ந்து செல்ல வேண்டும். அதற்கு நமது உடலைப் பற்றி ஒரு சில கருத்துக்களையாவது தெரிந்து கொண்டால்தான். நமது இலட்சிய வாழ்க்கைக்கு அது இனிய வழிகாட்டியாக அமையும்.

நமது உடலைப் பற்றிக் கூறும் பொழுது, எலும்பாலும் தசையாலும். இரத்தத்தாலும் ஆனது என்றே கூறுகின்றார்கள். நமது உடலின் அடிப்படை செல்களால்