பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

83


உட்கொண்டால் வயிறு நிறைந்துவிடும் என்ற உணர்வு ஏற்படுகின்ற பொழுது சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அதுதான் சரியான அளவு என்கிறார்கள்.

சாப்பிட்டு விட்டு உண்ட இடத்தை விட்டு எழுந்திருக்கும் பொழுது. பசிக்கின்ற உணர்வுடன் எழுந்திருப்பதுதான் சரியான உண்ணும் அளவு என்றும் கூறுகின்றார்கள். ஆக, உணவு உட்கொள்ளும்போது கொள்கின்ற மனநிலைதான் முக்கியம், உணவின் அளவு முக்கியமல்ல என்று வேறுபலரும் பலவித அபிப்பிராயங்களும் கூறுவார்கள்.

எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதை விரும்பிச் சாப்பிட்டால் வயிறு ஏற்றுக் கொள்ளும். வயிறு தாங்குகின்ற அளவுக்கு உண்பதுதான் வயிற்றைக் காப்பாற்றும் நல்ல வழியாகும். வயிறு சுகமாக இருந்தால். வாழ்வும் சுகமாக இருக்கும். ஆகவே, வயிற்றுக்கு உணவு தரும் போது என்னென்ன முறைகளை மேற்கொள்ள வேண்டும்?

என்ன உணவு, எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம், எந்த அளவு சுவை எவ்வளவு விலை உயர்ந்தவை என்பதனைப் பற்றி வருவதல்ல உடல் நலம். இருக்கின்ற உணவை கிடைக்கின்ற அளவை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் நமது உடல் நலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது, மேலும் உரம் ஏறி தந்து கொண்டிருக்கிறது.

உணவு உண்ணும் பொழுது, நமது சூழ்நிலை என்ன, மனோநிலை என்ன என்பது தான் முக்கியம், மனம் போல