பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


(Lymph) போன்றவை எல்லாம் அதிகமாக நீரோட்டத்தன்மை நிரம்பிய இயல்பு வாய்ந்தவையாகும்.

நீர்தான் உடலின் முதல் தரமான தேவை என்பதால், நீரை நாம் மிக ஜாக்கிரதையாக அறிந்து கொள்ள வேண்டும். நீரின் முக்கிய பயன்களையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

உள்ளுறுப்புக்களில் குறிப்பாக, குடல் பகுதியில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்க, நீர் உதவுகிறது. அதனால், உணவை ஏற்று அவற்றை எடுத்துச் செல்லவும். கழிவுப் பொருட்களை எளிதாக வெளியேற்றவும், அத்துடன் அல்லாமல், நீரானது, உடலின் வெப்பத்தை சதாகாலமும் அதாவது குளிரிலும் வெப்ப நாட்களிலும், ஒரே நிலையில் வைத்துக் காக்கவும் தண்ணீர் உதவுகிறது. தேவைப்படுகிறது.

ஆகவே, எந்த அளவு தண்ணீர் குடிக்கலாம் என்ற ஒரு கேள்வியை எழுப்புவார்கள். விஞ்ஞானிகளோ அளவு எவ்வளவு என்று குறிப்பிடாமல், பல காரணங்களை சுட்டிக் காட்டி அதன் வழியாக தேவையைக் குறிப்பிட்டுக் காட்டுவார்கள்.

அப்பொழுதைய தட்ப வெப்ப நிலை, அணிந்திருக்கும் ஆடையின் தன்மை: மேற் கொள்கின்ற உடல் உழைப்பின் இயல்பு. மற்றும் தனிப்பட்டவரின் உடலமைப்பு இவற்றை பொறுத்தே, நீர் உட்கொள்ளும் அளவு அமைகிறது.

ஆகவே, உணவு உட்கொள்கின்ற அளவுக்கு மேலே, தினமும் 6 லிருந்து 8 டம்ளர் வரை நீர் பருகலாம் என்றும்