பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

91


குறிப்பிடுகின்றார்கள். அதாவது, உடலுக்குத் தேவையான நீர் நிலை உடலில் இருப்பது போல, நீரைக் குடிக்கலாம்.

மலச்சிக்கலும், அஜீரணமும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க நீர் உதவுகிறது, ஆகவே உண்ணும் உணவுக்கு உயிரூட்டமாக நீர் உதவுகிறது. உடலின் தளர்வினைப் போக்கவும் வலிமையாக்கவும் நீர் பயன்படுவதால், வறட்சி இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். நீர் அளவு குறைந்தால் உடலில் வலி ஏற்படுவதுடன் செயல் படாத தன்மையும் ஏற்படும்.

சாப்பாட்டிற்கும் முன்னும் இடையிடையேயும் தண்ணீர் குடிக்கக்கூடாது. அதனால் ஜீரணம் பாதிக்கும் என்றும் கூறுவார்கள். பழகிப் போனவர்கள், உணவுக்கிடையில் நீர் குடித்தால் ஒன்றும் கெடுதலில்லை என்றும் கூறுகின்றார்கள். உண்ணும் உணவின் அளவு குறையும், பின்னும் ஜீரண சுரப்பியின் நீர் சுரக்கும் அளவு பாதிக்கப்படும் என்பதால் உணவுக்குப் பின் நீர் அருந்தலாம் என்பார்கள்.

அதனை அவரவர் பழக்கத்திற்கே விட்டு விடுவோம்.