பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 அரை நொடியில் உயிர்பிரிந்து ஓடி விடுகிறதே ! மனிதன், என்ற பெயர் மாறி, "பிணம்' என்ருகி விடுகிறதே ! இதுவும் நம் கையில் இல்லை என்பதும் புரிந்து விட்டது. பின்னர் நமக்கு என்ன தான் இங்கு இருக்கிறது ? எவ்வளவுதான் இங்கு இருக்கிறது ? கொண்டு வந்தது ஒன்றுமில்லை. சாகும் பொழுது கூட வருவது ஒன்றுமில்லை: கூட வருவது பாவ புண் ணியம்தான் என் கிருர்கள். "காதறுந்த ஊசியும் கடை வழிக்கு வாராது காண்” என்று சித்தரிகள் பாட்டும் நமக்கு நன் ருகவே தெரியும். இந்தியாவில் பதினேழு முறை கொள்ளேயடித்துத் தங்க வைர நகைகளைக் கொண்டு சென்ற கஜினி முகமதுவின் கடைசி நாள்... மரணப்படுக்கையில் அவன் மன்ருடிக் கிடந்த நேரம். தான் திரட்டிய செல்வத்தையெல்லாம் கொண்டுவந்து தன் கண் முன்னே அணி அணியாக வைக்கச் சொன்னனும், ஆசைத் தீரப் பார்த்த அரசன் அழத் தொடங்கி குைம். ஆண்டவன் கோயிலேயே அழிவுபடுத்தி ஆக்ரமித்த ஆற்றல் மிகு மாமன்னன் , பெருவீரன் அல்லவா ! அவன் அழலாமா ? அருகிலுள்ளோர் ஆச்சரியப்பட்டனர். 'ஆண்டவன் எனக்கு அனுமதியளித்தால், அத்தனை செல்வங்களையும் நான் என் கூடவே, கொண்டு போய் விடுவேனே. எல்லாவற்றையும் இங்கே விட்டுவிட்டல்லவா போகிறேன்' என்று வீறிட்டழுதானும், மகுடம் ஏந்திய மன்னனுக இருந்தாலும் என்ன - மண் ஒடு ஏந்தும் மரத்தடிப் பண்டாரமாக இருந்தால் என்ன ? எல்லோருமே மனிதன் தானே : அனைவரும் மரணத்திற்கு இரையாக வேண்டியவர்கள் தானே ! ". .