பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


"உலகில் உள்ள எல்லா மிருகங்களையும் நான் பார்க் கிறேன் ! பறக்கின்ற மிருகங்கள். நடக்கின்ற ஜீவன்கள், நீரிலே மிதக்கின்ற உயிர்கள் எல்லாவற்றையும் பார்க்கிறேன். அத்தனே மிருகங்களிலும் ஒன்ருக விளங்கும் மனித மிருகத்தை மிகமிக முட்டாள்தனமான மிருகம் என்றே நான் கருதுகிறேன்’ என்கிருர் நிகோலஸ்பாய்லி எனும் அறிஞர். ஏன் அப்படி அவர் கருதுகிருர் ? + = "நீதியையும் நியாயத்தையும், நாட்டின் சட்டத்தையும் மறந்து விட்டால், மனிதன் எப்படி வாழ்வான் தெரியுமா ? தனது தேவைக்காக கிருப்திக்காக எதையும் செய்யத் தயங்காத பயங்கர மிருகம் ஆவான்’. அதனுல்தான் மனிதனை முட்டாள்தனமான மிருகம் என்கிறேன்’ என் ருர் அவர். ஆண்டவன் படைத் த அத்தனை உயிர்களிலும் அற்புத உருவமாக, அழகின் விளக்கமாக, அறிவின் ஜோதியாக, ஆற்றலின் நிலைக் களமாக அல்லவா மனிதன் திகழ்கிருன் ! பின்னர் ஏன் அப்படி அறிஞர்கள் இழிவாகக் கூறுகின் ருர்கள் ? மனிதன் வாழவில்லை. வாழ்வதற்கு முயல்கிருன். தூரத்தில் தெரிகின்ற மங்கிய வெளிச்சத்தைக் காண தொல்லைப் பட்டுக் கொண்டு ஒடுகிருன் மனிதன். தன் கையிலே உள்ள விளக்ைைகக் காணவும் கண்டு மகிழவும் கூட நேரமில்லாமல் ஒடுகிருன் !! வாடுகிருன் ! ஏன் ? ஏன் ? சாமுவேல் பட்லர் எனும் மேல் நாட்டறிஞர் அதற்குக் காரணம் கூறுகின் ருர் H வாழ்க்கையின் மிக முக்கியமானது மகிழ்ச்சியாக இருப் பதுதான் என்பதை எல்லா மிருகங்களும் உணர்ந்து கொண்டு