பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சவலைக் குழந்தை போல சதா அரற்றிக் கொண்டிருக்கும் மனதிகின : நாம் சாந்தப் படுத் துவதுடன். அதை சதா கால மும் சந்தோஷமாக இருக்க வேண்டிய சூழ்நிலையையும் தர முயல வது போலவே, மனதை நாம் மாற்றியமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருமுறை விவேகானந்தர் காட்டுவழியே சென்று கொண் டிருககும் பொழுது, குரங்குக்கூட்டம் ஒன்று அவரை விரட்டிக் கொண்டே வந்ததாம் இவரும் பயந்தவாறு வேகமாக நடக்க நடக்க, குரங்குகளும் கூடவே ஆங்காரத்துடனும் ஆவேசத்துடனும் வந்ததாம். இனிமேல் இவற்றின் அட்டகாசத்தை வளர விடக் கூடாது என்று துணிந்த விவேகானந்தர், நின்று கோபமாகக் கூட்டத்தைப் திரும்பிப் பார்த்ததும், அவைகளும் நின்று விட்டனவாம். பின்னர் அவர் விரட்டுவதற்காக முன்னே நடக்க. அவைகளும் பின்னுேக்கிப் போய் ஓடி ஒளிந்து கொண்டன என்பது ஒரு நிகழ்ச்சி. இந்த இனிய நிகழ்ச்சியை நாம் இப்பொழுது நிஜனவு, குக் கொண்டு வருவோம. குரங்குக் கூட்டம என்பது வருகின்ற குழப்பங்களும் கவலைகளும் தான். கொஞ்சம் நாம் அயர்ந்து போல்ை, அவை நம்மை விரட்டியும் மிரட்டியும், சில சமயங் களில் ஏறி மிதித்துக் கடித்தும் குதறியும் விடும், அதை விரட்டத் தெரிந்தவர்களே வெற்றி பெறுகின்ருர்கள். மகிழ்ச்சி அடைகின்ருர்கள் . ஆமாம்! இதுவே உணர்ந்து பார்க்க வேண்டிய வழி. |உண்மை வழி முறையாகும். - 'யார் துன்பத்தைத் தேடுகின்ருர்களோ, அவர்கள் அதைக் கண்டடைவார்கள்’ என்பது ஒரு பழமொழி