பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O இந்தக் கவலையின் ஆதாரம்தான் என்ன ? அடித்தள ஊற்றுதான் எங்கே ? எப்படி இது ஆள் பிடிக்கிறது ? ஏன் இது வந்தால், எப்பொழுதும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது? திரும்பி வரக்கூடாத ஒரு வழிப்பாதையா இது ? அல்லது போளுல் போக முடியாத முட்டுச் சந்தா ? ஒன்றுமே புரியவில்லையே ! கவலையைப்பற்றி நாம் நினைக் கும் பொழுதே நமக்கு கவலை வந்து விடுகிறது. இருபதாம் நூற்ருண்டின் இணையற்ற வியாதி என்று வாழ்க்கைக் கவலையை சொல்வார்கள். வாழ்க்கையைப் பற்றி நினைத்தவுடனே. வருத்தமாக இருக்கிறது என்று விருத்தம் பாடுபவர் உண்டு. புலப்பி வைப்பவர் உண்டு, 'ஒ' எனும் பாணியில் ஒப்பாரியும் நடைபெறுவதுண்டு. என்ன காரணம் ? பலஹீனமான மனது தான் காரணம். அது சவலைக் குழந்தைபோல சதா அரற்றும் சூழ் நிலைதான் காரணம். அத்தனை கவலைகளுக்கும் இவையே காரணம். பலஹீனமான உடல நோய்கள் வந்து பற்றிக் கொள்வது போல, பலஹீனமான மனதை வலைகள் வந்து பிடித்துக் கொள்கின்றன. உலகில் எத்தனை விதமான கவலைகள் ! கவலையின் முக்கியமான தூதுவர்கள் பயங்கள்' (Fears) என்பவைதான். பயமில்லாத பயம், அதாவது எதற்கெடுத்தாலும் ஏற்படு கின்ற கற்பனை பயங்கள், நிஜமாக நடக்காது என் ருலும் கூட நடந்தால் என்ன செய்வது என்று தடுமாறுகிற மனப் பிராந்தி பயம்.