பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


புதிதாக யாரைக் கண்டாலும், அல்லது புதிய சூழ்நில இருந்தாலும் பயம். அறிமுகமில்லாதவரைக் கண்டதும் ஒரு வகை அச்சம், தன் 8னப் பற்றியே நம்பிக்கையில்லாமல், தாழ்வு மனப் பான்மை கொண்டு, தாழ்ந்து போக வைக்கின்ற பயம். பிறருடன் சேர்ந்து பழக, விருந்தில் கலந்து கொள்ள, சு முகமாகப் பழக முடி யாத அளவுக்குத் தடுக்கும் பயம். வயதாகிக் கொண்டு வருகிறதே, கிழமாகிப் போய் விடுவோமா என்று தன்னைத் தானே கேள்விகள் கேட்டு வருத்திக் கொள்கின்ற வயது பயம். உயரமான இடத்தில் நிற்கிருேமே; கீழே விழுந்து விட்டால் என்ன செய்வது ? சுற்றிச் சுற்றி வருகிருேமே, மயங்கி விழுந்து விட்டால் என்ன செய்வது ? என்ற உயர பயம்; இடம் பார்த்து பயம். மருத்துவமனையினைப் பார்த்தவுடன், நமக்கும். ஏதோ ஒரு நோய் இருப்பது நிச்சயம்; நாமும் வந்து இப்படித்தான் ஒருநாள் கஷ்டப்படுவோம் என்ற கற்பனை நோய் பயம். நம்மை யாருமே விரும்பமாட்டார்கள். நாம் காலம் எல்லாம் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்று தன்ன அருவெறுக்கத் தக்க ஆளாகப் பாவிக்கும் இழிந்த பயம். மேடை பயம், பேச்சு பயம். போன்ற பல பயங்கள். இவைகள் நமக்குள் கற்பனை நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டுப் பிறகு கவலைகளுக்குள் கொண்டு போய் ஆமுக்தி விடுகின்றன. அதற்கும் மேலே, இறந்து போனுலும் போய்விடுவோம் என்ற சாவுப் பயம்,