பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பலவீனப்பட்ட மனதுள்ளவர்கள் மற்றவர்களைப் பார்த் துப் பார்த்து மனம் ஏங்கிக் கொண்டிருப்பார்களே ஒழிய தங்களே தகுதியாக்கிக் கொள்ளவோ, மிகுதியான வழிகளை மேற்கொள்ளவோ முயல்வதில்லை. அதனுல் அவர்கள் வாழ்வெல்லாம் தடுமாற்றத்திலே தான் அலை பாய்ந்து கொண்டிருக்கும். உலகம் என்பது ஒரு மேடை என்ருல், அதில் வாழும் மனிதர்கள் எல்லாம் நடிகர்களே என்பதை நீங்கள் அறிவீர்கள். * எந்தப் பாத்திரத்தை ஏற்ருல் புகழ் கிடைக்கும் என்பது நடிப்பின் சிறப்பல்ல. ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை நன்கு திறம்பட நடிப்பதில்தான் சிறப்பும் செழிப்பும் நிறைந்து வரும் என் பார்கள். அவளுல் அந்த பாத்திரம் புகழ் பெற வேண்டுமே தவிர, அந்தப் பாத்திரத்தால் அவனுக்குப் புகழ் வர வேண்டும் என்பது முறையல்ல. அது நடக்காத ஒன்று. அது போலவே, எங்கு பிறந்திருக்கிருேம். நமக்கு என்ன அந்தஸ்து பாரம்பரியம் என்று பார்க்காமல், மனிதராகப் பிறந்து விட்டோம். நமக்குள்ள திறமையை புரிந்து கொண்டு, அதை வளர்த்து. அதன் வெற்றியில் மகிழும் மனதில்தான் மகிழ்ச்சி நின்று நிலவி நீடித்து வளரும். இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தான், பாதி குழப்பங்கள் வாழ்க்கையில் வந்து பங்கு போட்டுக் கொண்டு, நம்மை பாடாய் படுத்தி வைக்கின்றன. நான் நன்குய், சந்தோஷமாய் இருக்கிறேன். ஏனென் ருல், எனது தேவைகளைக் குறைத்துக் கொண்டு விட்டேன். மிகச் சாதாரண மனிதன்போல வாழ்க்கையை மேற் கொள்வ நீ. ம.-8