பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அல்லது நம்மால் இயலாத கையாலாகாதத் தன்மை யாகக் கூட இருக்கலாம். நாம் நமது பலவீனங்களை தெரிந்து கொண்டு, அவற் றைத் தவிர்க்கவோ மீண்டும் வராமல் தடுக்கவோ முயற்சிப்பதில்லை, "நம்மை நாமே பெரிதாக நிகனத்துக் கொண்டிருப்பதால் நிகழு கேடு இது' என்பதை நாம் உணர்வதே இல்லை என்ருல் என்ன செய்வது? நமது பலஹீனத்தை வெளியே சொல்லக் கூச்சம். அல்லது, நமது உணர்ச்சி வசப்பட்ட ஆங்கார நிலை..., அல்லது தன் இனப் பற்றிய தாங்காத தற்பெருமை. அல்லது சூழ்நிலைக் கேற்ப தன்னை சரிபடுத்திக் கொண்டு ஏற்றபடி நடந்து கொள்ளத் தெரியாத இரண்டுங்கெட்டான் நிலை. இவற்றில் ஏதோ ஒன்று வெற்றியின் வழியை மறித்துக் கொண்டு. தோல்வியைத் தொடர வைத்துக் கொண்டிருக் கிறது என்பது தான் நாம் இப்பொழுது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். தோல்வி என்பதை ஒரு அனுபவம் என்று நினைக்கும் மனது வேண்டும் நமது பழைய முயற்சியின் புதிய அறிவார்ந்த தொடக்கம் என்று எண்ணுகின்ற தெளிவு வேண்டும். திடீரென்று ஏற்படுகின்ற வெற்றியும், அடிக்கடி வருகின்ற சிறுசிறு வெற்றியும் ஒருவருக்குக் கர்வத்தை உண்டாக்கிக் களங்கப்படுத்தி விடும். ஆரம்பத் தோல்வியோ ஒருவரை அறிவுடையவராகவும் அனுபவசாலியாகவும் மாற்றி, இறுதி யிலே இனிய வெற்றியைப் பெற்று இதத்தோடு மகிழச் செய்து விடும்.