பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு எதிர்ப்பை சந்தித்துத் தான் ஆகவேண்டும். எதிர்ப்பைக் கண்டு அஞ்சுவது கோழைத்தனம். எதிர்ப்பு எதிரே வருகிறது என்ருல். அதை -ஏற்றுக் கொள்ளவேண்டும். அதை எப்படி முறியடித்து நிறை வேற்றுவது என்ற உனது முழு சக்திக்கும் அது வாய்ப்பளிக் கும் வரப் பிரசாதம் என்று தான் தடைகளையும் எதிர்ப்புக் களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, ஒதுங்குவதும் ஒடி ஒளிவதும் பேடிகளின் செயலாகும், அவர்கள் தான் பிதற்றிக் கொண்டு வாழ்வைப் பழித்துக் கொண்டிருக்கும் வடிகட்டிய சோம்பேறிகள் ஆவார்கள். எதிர்ப்பை சமாளிக்க சமாளிக்க, மனத்திறன் மட்டுமா கூடுகிறது? அந்தத் தடையை தாண்டும் பொழுதும் வெல்லும் பொழுதும், தன்னம்பிக்கை நிறைகிறது. தன் திறன் வெளிப் பாடு கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இந்த உலகில் வேறெதுவும் கிடையாது என்பதை மட்டும் நாம் உணர்ந்தால், அதுவே போதும். அதுவே ஆனந்தமான வாழ்க்கையாகும். அழகான உலகம் இது. இங்கே ஆயிரக்கணக்கான செல்வங்களும் சுகங்களும் நிறைந்து கிடக்கின்றன. உண்மை யாக உழைத்து அவற்றைப் பெற முயல வேண்டும். வழியில்லையென்ருல், சந்தர்ப்பங்களே உண்டு பண்ண வேண்டும். போராட வேண்டும். பொறுமையுடன் திறமை -யுடன் உழைக்க வேண்டும். அப்பொழுது வெற்றியும் வரலாம். தோல்வியும் நிகழலாம். கவலையில்லையென்று மேலும் மேலும் போராடி உழைக்க வேண்டும். தோல்வியே வராத வெற்றியில் சுவையிருக்காது வெற்றியே வராத தோல் விகளில் ஈடுபாடு நிறைந்த உழைப்பு இருக்காது.