பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ü9 அதையெல்லாம் நாம் நினைத்துப்பார்க்கவே வேண்டாம், நமக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. நமக்கு என்று ஒருபயணம் இருக்கிறது. அந்தப்பயணத்தை இன்று நாம் மேற்கொண்டிருக்கிருேம். சுற்றுலா பயணத்துக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்வதுபோல, தேவையான திட்டங்களை தீட்டி மேற் கொண்டு முயற்சிகள் எடுப்பது போல, நாமும் அன்ருடம் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் இயற்கையின் நியதி. வாழ்க்கையின் வழி என்ன ? எது என்று கேட்டால் வருகின்ற விடை ஒன்றுதான். அது மேலே நட என்பது தான். தொடர்ந்து சென்று கொண்டேயிரு என்பதுதான். ஆனல் எப்படிச் செல்வது ? அதற்கு யார் துணை என்று கேட்கவேண்டாம். ஏனென் ருல் யாரும் யாருக்கும் 'இப்படிதான் வாழவேண்டும் என்று கற்றுத் தரமுடியாது. துணை வரவும் முடியாது ஏனென் ருல் அது அப்படித்தான். வாழ்ந்துகொண்டு வருகிறவர்களுக்கு, பிரச்சினைகள் வந்து கொண்டுதான் இருக்கும். வளர்ந்து கொண்டுதான் இருக்கும். பிரச்சினைகளும் ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டுதான் இருக்குமே தவிர, நின்றுபோய் விடுவதில்லை. ஏதாவது ஒரு உருவத்தில் நம்மைச் சுற்றி சுற்றி வந்து கொண்டுதான் இருக்கும், _ நமக்கு யார் வந்து வழிகாட்டுவாt ? துயர் மாற்றுவார் ? துணை நிற்பார் ? தொடர்ந்து உதவுவார் என்று தளர்ந்துபோய் விடவேண்டாம். நமக்குத் துணை இயற்கைதான். நமது அன்னே, நமது குரு, நமது சுற்றம் எல்லாம் இயற்கைதான். வாழவேண்டும் என்ற விருப்பமும், வாழ்க்கையில் உள்ள பற்றும்தான் ஒருவருக்கு சுவையானதாக அமையும். னென் ருல் நாம் வாழ்கின்ற உலகம் வளம் நிறைந்த பூமி பாகும். ஆனல் நாம்தான் ஏழையாகவே வாழ்கிகுேம். நாம்