பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O மனதுக்குள்ளே ஏழையாக வாழத் தொடங்கி விட்டால், வாழ்க்கையே வெறுத்துப் போய் விடும் வெளி உலகில் நாம் பணமில்லாத ஏழையாக இருக்கலாம். ஆனல்?... ஆளுல், செல்வன் என்கிற திருப்தியைத் தருகின்ற மகிழ்ச்சியை நாம் கொண்டு விட்ட்ால், நாம் எப்பொழுதுமே வாழ்க்கையை சுவைக்க முடியும். ரசிக்க முடியும். சுகிக்க முடியும். இந்த முறைகளை இனிய வழிகளைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். * உலகம் சுவையானது. வளம் நிறைந்தது. அமைதி உள்ளது. ஆனல் நாம் தான் வாழ்க்கை கசக்கிறது என்கிருேம். ஏழையாக வாழ்கிருேம் என்கிருேம். குழப்பமும் பிரச்சினையும் நிறைந்தது என்கிருேம் ? ஏன் அப்படி ? நம்மை நாமே புரிந்து கொள்ளவில்லை அதனுல்தான். நாம் அமைதியை விரும்புகிருேம் ஆசைப்படுகிருேம் ஆல்ை நம்மைச் சுற்றி உள்ளவர்களுடன் பிரச்சினைகளாக்கி, சந்தேகமும், பயமும், அபிலாசைகளும் நிறைந்திடும் பூகம்பக் கடலாக அல்லவா ஆக்கிக் கொள்கிருேம். பிறகு அமைதி எப்படி வரும் ? நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறரையும் அனுசரித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் அமைதியாக வாழமுடியும். ஒருவருக்கு அகவாழ்க்கை என்றும், புற வாழ்க்கை என்றும் இரண்டு வாழ்க்கை முறை உண்டு. தனக்குள்ளே வாழ்வது ஒன்று. சமுதாயத்துடன் சேர்ந்து வாழ்வது மற்ருென்று என்பதாக அது அமையும். அகவாழ்க்கையை நாம் புரிந்துகொண்டோமானுல், நமக்கு புறவாழ்க்கை மிகவும் சுலபமானதாக சுகமானதாக அமைந்துவிடும்.