பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மனமும் மார்க்கமும் –- மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என் ருல் நமக்கருகில் உள்ள சுற்றுப்புற சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக் கொள் வதில் இதயமும் எண்ணமும் இணைந்து போல்ை, குறை சொல்கிற குதர்க்கப் புத்திக் கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒடிவிடும். பிறகு, பிடிக்காதவற்றிலும் நல்லனவற்றைப் பொறுக்கி எடுத்துப் போற்றி வைத்துக் கொள்கிற பொறுமை யும் பெருந்தன்மையும் கூடவே வந்து விடும். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார் ? மற்றவர்களே விரும்புகிறவர்கள்; மற்றவர்களையும் மனிதர் கள் தான்' என்று ஏற்றுக் கொள்கிறவர்கள்; மற்றவர்கள் குணங்களை மதிக்கிறவர்கள்; மற்றவர்கள் திறன்களைப் பாராட்டுகின்றவர்கள்; மற்றவர்கள் உறவினை உண்மையாக பாவிக்கின்றவர்கள் இதற்கு பண்பட்ட மனம் வேண்டும் ! எப்படி ? "தான் "நான்' என்கிற அகம்பாவ உணர்வுகளே அகற்றி விடுகிற பண்பட்ட மனம் உள்ளவர்களால் தான் இத்தகைய