பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 எவ்வளவோ விஷயங்கள் நமக்கு இருக்கின்றன அவற்றை மனிதன் உணர்ந்து கொள்ள முற்படவேண்டும். நமக்கென்று நல்ல கடமைகள் உண்டு. பிறரைத் துன்புறுத் தாமல் அனுபவிக்கும் உரிமைகள் உண்டு. இவற்றைப் புரிந்து கொள்கின்ற மனமே, புண்ணியம் செய்த மனமாகும். நல்ல மனதின வளர்த்துக் கொள்வோம். அது நமக்கு நல்ல வாழ்க்கையைத்தான் தரும், மாவு அரைக்கும் எந்திரத் தில் கோதுமை மணிகளைக் கொட்டிவிட்டு அரிசிமாவை எதிர் பார்த்து பாத்திரத்தை ஏந்துவது அறிவீனம், கொட்டிய தானியத்தின் மாவுதான் நமக்குக் கிடைக்கும். பாழாகிப் போன தானியத்தின் மாவும் பாழாகித்தான் வரும். அது போலவே, நல்ல செயலைச் செய்துவிட்டு, நன்மையான பயனே எதிர்பார்ப்பதுதான் நீதியாகும். இப்படிப்பட்ட நீதியும் நியாயமுமே நமக்கு மகிழ்ச்சியான, வாழ்வை வழங்குகிறது.