பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அன்பு, பதட்டப்படாத, கோபப்படாத பண்பு, எதையும் இனிதென்று அனுபவிக்கின்ற தெம்பு எல்லாம் வேண்டும் "என்கிருர்கள் இவைகள் வாழ்வின் கடினமான சூழ்நிலைகளை கட்டோடு மாற்றி அமைக்கும் ஆற்றல் பெற்றவைகள் என்று உணர்ந்து கொள்ளச் செய்துவிடும். மனம் தான் அனைத்துச் செயலுக்கும் காரணம். துன்பமா இன்பமா-அது மனத்தின் உள்ளே உலாவரும் விளைவுதான். * நீதியாயிரு நிதமும் உழைத்திடு-நினைவுகளில் நேர்மையை நிலைக்க விடு-உனக்கு என்றும் மகிழ்ச்சியே' என்கிருர் ஒரு மேல் நாட்டறிஞர். இது வரை மகிழ்ச்சியாக நாம் வாழ முடியும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்த கருத்துக்களைப் பற்றி ஆராய்ந்து வந்தோம். இனி மகிழ்ச்சியான வாழ்வுக்கு மணியான பத்துக் கட்டளைகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்,