பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மகிழ்ச்சியாகவே வாழ்வோம்! 'சத்தமும் சலனமும், சங்கடமும் சஞ்சல மும் நித்தியம் நிறைந்தது தான் வாழ்க்கை" என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின் ருர்கள். நிலைமை புரியாதவர்கள் இக் கருத்தை அணைத்துக் கொண்டிருக்கின் ருர்கள். வாய் சாமர்த்தியம் நிறைந்தவர்களோ மழைகாலத் தவளை யாக, முரண் டு பிடிக்கும் குதிரையாகக் கனத்துக் கொண்டிருக் கின் ருர்கள் . எதுவும் நினைப்புக்கேற்றபடி தான் இருக்கிறது. அது போலவே நினைப்பது போல் தான் எல்லாமே நடக்கிறது. சில நேரங்களைத் தவிர. இந்த நிலைமையை உணர்ந்தே அனுபவவாதிகளும் அறிஞர்களும் கூறினர்கள் மனம் போல் வாழ்வு" என்று. ஆமாம் ! மகிழ்ச்சி என்பது உள் மனதில் நிகழ்வதாகும். நிதமும் நினைவில் விளைவதாகும். எதையுமே அனுபவிக்கத் தெரிந்த மனதிலே என்றுமே மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் போதும். *