பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 யான குணமும், நிறைவான நினைவும் தான் மகிழ்ச்சி என்று நீங்கள் உணருகின்ற நேரத்திலேயே, மகிழ்ச்சிக்குள் நீந்து கின்றீர்கள். அது நியாயமான மகிழ்ச்சி. ஆகவே, பயன் தருகின்ற பத்து வழிகளை நாம் புரிந்து கொண்டு வளர்த்துக் கொள்ள முயல்வோம். நலம் பெறுவோம். 1. உழைப்பும் முயற்சியும் ஒருவருக்கு இரண்டு கண்கள் போன்றவை. உழைப்பு உடலுக்குத் திடமளிக்கிறது. முயற்சியோ மனதுக்கு வலிமையை அளிக்கிறது. நலமான உடல், அதிலே நடமாடும் உள்ளம் நலமாக வாழ்வதால், நல்ல நினைவுகளும், நல்ல உறவுகளும் தினம் நம்மைத் தொடரும். உழைப்பை வெறுப்பவர்கள் பிறரை நசிப்பவர்கள் ஆவார்கள். மிருகங்களின் இரத்தத்தைக் குடித்து உயிர் வாழும் அட்டைகள் போல, அவர்கள் வாழ்பவர்கள். ஆவார் கள். அது கேடு பயக்கும் கொடிய வாழ்க்கை முறையாகும். ஆகவே. உழைப்பிலும் உன்னதமான முயற்சியிலும் நாம் மகிழ்ச்சியை நிச்சயமாக அடையமுடியும். நமது உடல் இரத்தத் தாலும் திசுக்களாலும் எலும் பு களாலும் நரம்புகளாலும் ஆனது என்பதை நாம் என்றும் மறக்கவே கூடாது. திடமான தேகத்தைப் பெற உழைப்பு முதலாவது தேவை என்பதை நினைவு கூர்வோம். உழைப்பை மதிப்போம். அந்தப் பிழைப்பால் பெருமை கொள்வோம். 2. நாம் மேற்கொள்கின்ற உழைப்பும் முயற்சியும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக, உன்னத லட்சியத்திற்காக அமைவது போல் இருக்க வேண்டும். அந்த லட்சியம் தனது மேம்பாட்டுக்கு, சமுதாய செழிப்புக்கு. தாய் நாட்டின் மேன்மைக்கு, பிறருக்கு உதவும் கடமைக்கு என்பதாக அமைய வேண்டும், 'உதவி, அதல்ை உதவி பெற்று வாழ வேண்டும் பிறரை, சந்தோஷப்படுத்தித் தான் சந்தோஷிப்ட் வேண்டும். பிறருக்கு துணைதந்து, அதன்மூலம் துணைப்ெற்று