பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மகிழ வேண்டும். பிறர் துன்பப்படுவதில் இன்பம் தேடுதல் மிருகக் குணமாகும். o - ஆகவே, நல்ல லட்சியத்தில் ஈடுபடுகின்ற உழைப்பு வேண்டும். நல்ல விகளவுகளில், முடிவுகளில் லயிக்கக் கூடிய முயற்சி வேண்டும். அந்த உழைப்பிலும் முயற்சியிலும் பெறுகின்ற மகிழ்ச்சி, பெருமைக்குரியது. பாராட்டுக்குரியது. என்றும் நிலைக்கக் கூடியதுமாகும். 8 நமக்கு நல்ல லட்சியத்தை நினைக்க, அதற்காக உழைக்கத்தான் உரிமை உண்டு. அதற்கேற்ற முடிவை இப்படித்தான் அமைய வேண்டும். என்பதை எதிர்ப்பார்க்க, உரிமை உண்டு. ஆனல், அந்த உரிமையின் உச்ச வரம்பை நிர்ணயிக்க நம்மிடம் எதுவும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 'காரியம் ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை, அதற்கான பலனே க் கொடுப்பது இறைவனின் கடமை என்று கூறும் கதையின் போதனையையும் நாம் அறிந்து பின்பற்ற வேண்டும். எதிர்பார்க்கும் பொழுதுதான் ஏமாற்றம் வருகிறது. ஒன்றையே நம்பிக்கிடக்கும்பொழுது தான் உள் ளம் உடைந்து போகிறது. சிந்திப் போனதைப் பற்றியே, சிதைந்து போனதைப் பற்றியே, நாம் சிந்தித்துக் கொண்டு கிடந்தால், எல்லாமே சீர் கெட்டுத் தான் போகும். இதைத் தான் மகிழ்ச்சியின் அடிப்படைத் தத்துவம் என்பார்கள். எந்த முடிவையும் ஏற்க நாம் தயார் என்ற நிலயில் இருந்து விட்டால், எதுவும் நம்மை ஒன்றுமே, செய்ய முடியாது. வந்ததை வைத்துக் கொண்டு வேண்டியபடி மாற்றிக் கொள்ளும் திறமைசாலிகளுக்கு எப்பொழுதும் தோல்வியும் இல்லை. துன்பமும் இல்லை. அவர்கள் மகிழ்ச்சி யெனும் மணி மலர்ப் பூங்காவில் நிதமும் உலாவரும் இனிய