பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 1 பிடித்து விடும் என்பது பழமொழி. அது போலவே, பிரச்சினை களும் பிரச்சினைகளுக்குரியவர்களை எங்கு மறைந்து கிடந்: தாலும் ஒடிப்போய் பிடித்து விடும். ஆகவே, பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவதும், பின் வாங்குவதும், பேடித்தனமாக ஒடி ஒளிவதும், வாடி வதங்குவதும் தவருகும். அது மகிழ்ச்சியை அளிக்காது. மாருக மனதிலே பயப்புரட்சியைக். கிளப்பிவிடும். வருகின்ற பிரச்சனைகள் எத்தனை - அவற்றில் முதலில் சந்திக்கவேண்டிய பிரச்சனை எது என்று சிந்திக்கும் பொழுதே பிரச்சனையின் வலிமை மடிந்து போகிறது . முதலில் தோன்றும் பிரச்சனையை ஆய்ந்து தீர்த்து விட்டால், அடுத்ததடுத்து வருவதை சந்திக்கும் தைரியம் வந்து விடுகிறது. மலையாள அவியல் போல, எல்லாப் பிரச்சனை களையும் ஒன்ருகப் போட்டுக் குழப்பினல், வேகுவது மனம், தானே ஒழிய பிரச்சனைகள் அல்ல. "துன்பம் தரும் பிரச்சனைகள் உன்னைத் துன்பப்படுத்தும் வரை, நீ துன்பப்படாதே. துன்பப்படுத்திக் கொள்ளாதே" என்பது ஒரு பழமொழி. பிரச்சனைகளைக் கண்டு பயப்படாதீர்கள். பிரச்சனைகளை சந்திக்கத் தயாராகிக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ளுங்கள். எதிர்த்துத் தீர்த்துக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்தான் பிரச் சனை கள் வந்து, அதைத் தீர்த்து வெற்றி பெறும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அளவேது ? எல்லை ஏது ? நிழலின் அருமையும் குளுமையும் வெயிலில் காய்ந்த பிறகு. தான் விளங்கும். வாழ்வின் மகிழ்ச்சியும் பிரச்சனைகளின் வெற்றிக்குப் பிறகு தான் புரியும்.