பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பிரச்சனைகளை வெற்றி கொள்ளும் போது, உங்கள் அறிவுக் கூர்மையும் ஆற்றலும் ஆண்மையும், விடாமுயற்சியும் வெளிப் படுகின்றனவே, அவற்றை வெளிக் கொண்டுவந்து, உங்களை பெரிய மனிதராக்கும் பிரச்சனைகளுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாமா ! பிரச்சனையை தீர்க்கும் வெற்றி வீரராக வாழுங்கள் ! பெருகாதோ மகிழ்ச்சி ? பிறகென்ன தாழ்ச்சி ? 6. நாம் மகிழ்ச்சியாகவே வாழ விரும்புகிருேம். அதற்கான முயற்சிகள் செய்வதிலும் குறைவு வைப்பதில்லை. அந்த வேகத்தில் செயலாற்றும் பொழுது நம்மையறியாமலே தவறுகள் நேர்ந்து விடும். தவறுகள் நேர்வது சகஜம் தான். தவறுகள் நேர்கிற பொழுது, புரிந்து கொண்டு தவிர்த்து விடுவது நல்லது. தவறுகள் செய்வது மனிதனின் இயற்கை தான் என்று சொல்லிக் கொண்டே, தவறுகளை நிறைத்துக் கொண்டே போகின்ற தடித்தனம், ஒருவரை தரைமட்ட மாக்கி விடும். ஆகவே, நேர்கின்ற தவறை மாற்றி நேர் கொண்டு விடுங்கள். தவறு நேர்ந்துவிட்டதே என்று தடுமாறிக் கொண்டிருக்க வேண்டாம். செய்கின்ற அல்லது தெரியாமல் நேர்ந்து விட்ட தவறை ஒத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். மீண்டும் அதே தவறு நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தக் கவனமும் கருத்தும், உங்களை கலங் காமல் பார்த்துக் கொள்ளும். மனம் இலேசானல், அங்கே மகிழ்ச்சி தான் பரவி நிற்கும். ஆகவே, முடிந்தவரை தவறு செய்யாமல், அதே நேரத்தில் தவறுக்குள்ளாகாமல், வாழ்ந்து விடுங்கள். 7. தன் இனப்பற்றிக் பெருமையாக நினைத்துக் கொள்வதில் மனிதன் அசகாய சூரணுயிருக்கிருன். அதுவும், தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில் அவனுக்குக் கிடைக்கும்