பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சுகம் ஈடு இணையற்றது. அதற்காக, அவன் எதை எடுத் தாலும் தன்ைேடு ஒப்பிட்டு. ஒத்துப் பார்த்துப் பேசுவதில் எப்பொழுதும் லயித்துப் போகிருன். இந்தத் தற்புகழ்ச்சி தான் சில சமயங்களில் மனிதனின் காலே வாரி விட்டு விடுகிறது. எதிரில் உள்ளவர்கள் மன நிலை யை புரிந்து கொள்ளாமல் பேசி, அவர்களது எரிச்சலேத் துரண் டிவிட்டு விட்டு, தனக்கே பல வழிகளில் துன்பத்தைத் தேடிக் கொள்ளவும் வைத்து விடுகிறது. அதல்ை தான் தற்புகழ்ச்சி வேண்டாம் என்று பெரியவர்கள் அறிவுரை கூறுகின் ருர்கள். தன்னே ப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது தவறில்லை. அது உள்ளுக்குள்ளே ஒருவித நம்பிக்கையை, செயலாற்றலை வளர்க்க உதவும். சில சமயங்களில் தன்னைப் பற்றிப் பெரிதாகப் பேசுகின்ற வாய்ப்புகள் ஏற்படும். அதுவும் தவறில்லை. ஆனல் அந்தத் தற்புகழ்ச்சிப் புராணத்தை அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுல். தன் இனப் புகழ்ந்து பேசுகின்ற நேரத்தில், மற்றவர்களே மட்டந் தட்டிப் பேசுவது மகா மகா முட்டாள் தனமாகும். பிறரை தாழ்த்திப் பேசி இன்பம் காணுகின்றவர் கள், அதே வழியில் கீழே இறக்கப்படுவார்கள். "தன்னே த் தான் தாழ்த்திக் கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான். தன்னைத் தான் உயர்த்துகிற எவனும் தாழ்த் தப்படுவான் என்கிற பைபிள் மொழியை நினைத்துக் கொள்ளுங்கள். தற்புகழ்ச்சி முன்னேற்றத்தை மட்டுமல்ல, வெற்றியையும் கெடுத்துவிடும். ஒரு தற்புகழ்ச்சிக்காரனுக்கு எதிரி அவனே தான். வேறு யாருமில்லை. ஆகவே, அடக்கமான பண்பு அளவிலா ஆனந்தத்தையும் என்றும் குறையாத மகிழ்ச்சியையும் அளிக்கிறது.