பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 என்பது தான் நமது குறிக்கோளாக இருக்கவேண்டும், ! எப்படி ? - ** நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும், நாம் இறைவனிட மிருந்து பெறுகிற பரிசாகும். இன்று, என்பது இறைவன் நமக்குக் கருணையுடன் தருகிற பரிசு, பரிசினைப் பெறுகிற பொழுது மகிழ்ச்சியுடன் தானே பெறவேண்டும். பரிசுப் பொருளே வாங்கி அனுபவித்து மகிழ்வதுபோலவே ஒவ்வொரு நாளேயும் நாம் அனுபவிப்போம். வீணுக்கி விடா மல், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வைப்போம். இல்லை என்று. தொங்கிப்போகாமல் இருப்பதில் திருப்தி கொள்வோம், நாளைய கனவில் நசிந்து போகாமல் இன்றைக்கே வாழ் வோம் (Live Today) என்று வாழ்வோம். வெற்றிகரமான மனிதன், எதிர்கால வளர்ச்சிக்காக இன்றைக்கு மகிழ்ச்சியோடு உழைக்கிருன். அவனுக்கு. கடந்து போன எதிர்காலம் அனுபவங்களாகவும், நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்காலம் உற்சாகம் ஊட்டுவதாகவும் அமைந்து விடுகின்றன. ஆகவே, இந்த நாளே இனியநாள், திருநாள், என்று. கொண்டாடும் குணத்தை வளர்த்துக் கொள்வோம். ஒவ்வொரு நாளேயும் நாம் பிறந்த நாளாக நினைத்துக் கொள் வோம். பிறந்த நாளில் என்னென்ன செய்வோமோ அது போலேவே காரியங்கள் ஆற்றுவோம். கடவுளைப் போற்று வோம், மகிழ்ச்சி தீபம் ஏற்றுவோம். மணியான வாழ்வினை மனம் போல வாழ்வோம். நீங்களும் மகிழ்ச்சியாகவே வாழலாம். இதைவிட சிறந்த வாழ்வு நமக்கு ஏது? வழிகளும் ஏது ? சிறப்பாக. வாழ்வோம். செழிப்பாக வாழ்வோம்! -