பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 எந்த வயதிலும் நாம் இன்பமாக இருக்க முடியும். இங்கே பாருங்கள். - - ஜோகான் உல்ப்காஸ் என்பவா தனது 88ம் வயதில் Faust எனும் நூலை எழுதி முடித்து அரிய புகழ் பெற்றர். எண்பது வயதினரான ஜார்ஜ், பர்னஸ் எனும் நடிகர்"தி சன்ஷைன் பாய்ஸ்’ எனும் சினிமாவில் நடித்ததற்காக. அகாதமி விருதினைப் பெற்று விளங்கினர். - தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி தனது முதிர்ந்த வயதில் உலக அமைதி காக்க அமெரிக்கப் பயணம் சென்று அந்நாட்டு அதிபர் கென்னடியை சந்தித்து சாதித்த சாதனை கண்டு: உலகமே வியந்து போற்றியது. 94ம் வயதிலும் கூட நாளுக்கு ஒரு ஊர். நேரத்திற்கு பல மேடைகளில் பேச்சு என்று, உலகம் சுற்றும் வாலிபராக தந்தை பெரியார் வாழ்ந்த விந்தை வாழ்க்கையை நேரில் கண் டாலும்கூட, நம்மையறியாமல் மதிக்கிருேம். வியக்கிருேம். புகழ்கிருேம், போற்றுகிருேம். வயது என் செய்யும் ? வ8ளத்து வயிருறும் முதுமை தான் என் செய்யும் ! மயக்கும் மன நிலையும், கனைக்கும் உடல் தளர்வும், காலமும் என்ன செய்யும் ? - அயரா உழைப்பும். அருகாத, ஆர்வமும், உயரும் இலட்சியமும், உறங்காத பெருநோக்கும் இயலா செயல் கண்டு இளக்காத முயற்சிகளும் இருக்கின்றபோது, வெற்றி வந்தல்லவோ விளையாடும் முடிசூடும். புகழ் பாடும் ! வரலாறு படைக்கும், வயதான காலத்தும் வளத்தோடு வாழ்ந்து காட்டிய வீரர்கள், மேதைகள், அறிஞர்கள், ஞானிகள் அனைவரின்