பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாழ்க்கை முறைகள் எல்லாம், இளமைக் காலத்தே இனிதாக உடலைக் காத்து வந்ததால் தான் என் கின்ற கருத்தினையே கவின் மிகு காட்சியாக நமக்குக் காட்டி நிற்கிறது ! - உதிய மரமாக வளர்வதும், எட்டி மரமாகக் காய்ப்பதும், முள் மரமாக முளைத்து நிற்பதும், பட்ட மரமாகப் படீரென்று போவது போல மனித வாழ்க்கை அமைந்து விடக்கூடாது. உயிர் காக்கும் நீர் தரும் ஊற்ருக, ஊருணியாக, வயிறு காக்கும் வளமான தஞ்சை வயலாக, கனிகள் தருவதில் கற்பகத் தருவாக, கனிவான அமைதி தருவதில் கலையெழில் கொளுசும் கோயிலாகத்தான் வாழவேண்டும். இப்படி நாம் கங்கணம் கட்டிக் கொண்டால், கற்பனையை வளர்த்துக் கொண்டால், காரியத்தில் முனைந்துவிட்டால், காலம் இனிக்கும். காரியம் செழிக்கும்-அமைதி கொழி க்கும். ஆனந்தம் நிலக்கும். அற்புதம் விளேக்கும் அமர வாழ்க்கையை தெய்வீக நிலைக்கு சமுதாயத்தின் மேம்பாட்டில் உயர்த்தும். இத்தனைக்கும் அடிப்படை ஒழுங்கு-ஒழுக்கம் என்ருல் உண்மைதானே ! பயன் பெற வாழவேண்டும். நலம் பெற வாழ, நலம் தரும் வாழ்வை வாழவேண்டும், உயர்வுடன் வாழ, உயர்வுறும் பணிகளே ஆற்ற வேண்டும். இதுதானே இந்த வாழ்க்கையின் லட்சியம் : விலங்கு வாழ்க்கையை வெறுப்போம். விளங்கும் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம். இலங்கும் இனிமைகள் துவங்க, இன்பங்கள் குலுங்க. புகழோங்கி வாழ்வோம்.