பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்பார்த்த அளவுக்குமேல் அவனுடைய கால்களுக்கு வலிமை வந்துவிட்டது. அவனால் என்ன செய்ய முடிந்தது? அந்த வலிமையை எதற்காகப் பயன்படுத்தினான். 12 ஆண்டுகள், அவன் ஒலிம்பிக் பந்தயத்தில், உலக சாம்பியனாகத் திகழ்ந்தான். 10 தங்க மெடல்களைப் பரிசாகப் பெற்றான்.

நின்ற இடத்தில் இருந்தே உயரத்தாண்டும் போட்டியில் அவனது சாதனை 5 அடி 5 அங்குலம். நின்ற இடத்திலி நந்து நீளத்தாண்டும் போட்டி.என்பதாக 10 தங்கப்பதக்கங்களைப் பெற்று! 'மனிதத்தவளை' என்ற மா பெரும் புகழையும் பெற்று விட்டான்.

ஏழைத்தாய் ஒருத்திக்கு 19 குழந்தை. ஏழ்மையில் தவித்த குடும்பத்தில் அவள் டபுள் நிமோனியா என்ற விஷக் காய்ச்சல் அவனைத்தாக்கிய காரணத்தால் இளம் பிள்ளை வாதம் வந்து பிடித்துக்கொண்டது. படுத்தப்படுக்கையானாள் அந்தச் சிறுமி.

ஏழைத்தாயால் பணத்தை வாரி இறைக்க முடியுமா என்ன? தினம் 90 மைல் தூரம் ரயிலில் சென்று மருத்துவ மனைக்கு போய் மருத்துவம் செய்தாள் தாய். தாயின் தவம் பலித்தது.

8 வயதில் நிற்கத் தொடங்கினாள் அந்தச்சிறுமி. குச்சிகள் தாங்கிக் கொள்ள 11 வயது வரை நின்றாள். தனியாக செய்யப்பட்ட காலணிகளைப் பொருத்திக் கொண்டு நடக்கத்தொடங்கினாள். 13 ஆவதுவயதில் மற்ற பெண்களைப் போல நடந்தாள் . ஓடினாள்.

ஆனால் தனது 17வது வயதில் கல்லூரியிலே நடந்த பாட்டிகளில் சிறந்த ஓட்டக்காரியாகத் திகழ்ந்தாள். அவளது விடாமுயற்சியால் ஒலிம்பிக் பந்தயத்தில் 3 தங்கப்