பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு எலும்புகள் ஒன்று சேர்ந்து இணைந்திடும் இடத்திற்க மூட்டுகள் என்று பெயர். தசைதார்களாலும் தரம்புகளாலும் கட்டப்பட்டிருக்கின்ற மூட்டுகள், தசைகளால் வலுவூட்டப்பட்டிருக்கின்றன.

இயல்பாக இனிதாக இம் மூட்டுகள் செயல்படுவதற்குத் தான் இயக்கம் (movement) என்று பெயர்.

ஒவ்வொரு வேலையும் உடலுறுப்புக்களின் பல்வேறுபட்ட இயக்கங்களாலேயே நிறைவேறுகின்றது. இத்தகைய இயக்கங் களே, நமது தினசரி வாழ்க்கைக்கு அதிகமாகத் தேவைப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

நினைவுகளுக்கேற்ப நெகிழ்ந்து கொடுக்கம் உடல் இயக்கத் தன்மையே நலம் நிறைந்த வாழ்வாக அமையும்.

இல்லாவிடில், இந்த நெகிழ்ச்சித் தன்மை ஒருவரு க்கு அமைய விடில், தசைக் கன் யங்கள், தசை விறைப்புகள் மற்றும் தசைப் பிடிப்புகள் முதலியன ஏற்பட்டு இயங்குவதற்கேற்ற இபல நிலையினை ஏற்படுத் தி விடும்.

இயக்கத்தின் போது தசைகள் நன்றாக நீளவாட்டில் இயக்கப்படுகின்றன. அதனால் தான் தசைகள் ஆற்றல் பெற வழிவகைகள் ஏற்படுகின்றன.

இயக்கம் பெறாத தசைகள் வடிவில் குறுகிப் போகின்றன. அதனால் மூட்டுக்களின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன. நீட்டி செயல்படும் ஆற்றலை மூட்டுக்கள் இழந்து விடுகின்றன.

அதனால், உடலின் இயக்கம் பிடிப்பில்லா தன்மையில் நிலவுகின்ற, நெகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இத்தகைய இயக்கமே தசைகளை வலிமை