பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோர்களின் அருங்குணங்களை ஆழமாகத் தீட்டி, ஆகாத் தன்மைகளையும் மிக நாகரிகமாகப் புலப்படுத்தியுள்ளார்கள் அவரது இருவகை விமர்சனங்களிலும் அவரது மென்மையும். மனிதநேயமும், நட்பும், நன்றி உணர்வும் ஆதாரசுருதியாக விளங்குவதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். தம்மை மிகவும் பாதித்தவர்களைக் கூடப் பாதகர்கள் என்று கூறத் துணியாத அவரது "தருமநெறி தகைமை மிக்கது

மேலும் இந்த நூலில் தமிழகத்தின் சுமார் 50 ஆண்டுகாலக் கல்வி வளர்ச்சியையும், அதற்கு வாய்ப்பளித்த சில களங்களையும் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் தெளிவாகத் தொட்டுக் காட்டியுள்ளார்கள் திருவேங்கடம் பல்கலைக்கழக்த் தமிழ்த்துறை, ஒருவகையில் அவரது தனிப்பட்ட சாதனையாகும். அதன் பரிணாமம் பற்றியும் பக்குவமாகக் கூறியுள்ளார்கள்.

கடந்த காலங்களில் கல்வித்துறையில் வாழ்ந்த பலவகை மனிதர்களைப் பற்றியும், அங்கே நிலவிய பல்வேறுபட்ட சூழ்நிலைகளைப் பற்றியும் சுவைசொட்டும் தமிழ்நடையில் இந்நூலில் அவர் நிரந்தரமாகப் பதிவு செய்துவிட்டார்

பண்பட்ட மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் இந்த நூலில் விளக்குகிறார். பண்பாளர்கள் எப்படி இலக்கியம் படைப்பார்கள் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது

பேராசிரியர் சுப்புரெட்டியாரின் ஏனைய தமிழ்ப்பணிகள் போன்றே. இவை நிலையான பதிவுகள், அழியாத இலக்கியப் பெட்டகங்கள்!

இராம வீரப்பன்

viii