பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நீங்காத நினைவுகள்

நம்பிக்கையில்தான் சந்தித்தனர் போலும் முதலியார் கூர்த்தமதி யுடையவராதலால் இவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்; எடை போட்டும் வைத்திருந்தார் இவர்கள் நிர்வாகத்திலிருந்த உயர்நிலைத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் நிலை, சம்பளத் திட்டங்கள் கட்டட வசதிகள் ஆகியவை பற்றி நன்கு அறிந்திருந்தவராதலால் "இவர்கட்கா உயர்நிலைப் பள்ளி" என்று நினைத்துவிட்டார். "பெருநிலக் கிழவர்" என்ற பெயரிலோ "வழக்குரைஞர்கள்" என்ற பதவியிலோ மயங்கவில்லை இவர்களுடைய குறைபாடுகள் அவர்தம் புதிர்க்கதிர்ப் பாவைக்குத் (X-ray vision) தப்பவில்லை.

நடுநிலைப் பள்ளித் திறக்கப்படும் போதே (1) ஓராண்டிற்குள் ரூபாய் பத்தாயிரம் வங்கியில் போட வேண்டும் 2 பதிவு பெற்ற குழு ஒன்று அமைத்து அதன்கீழ்ப் பள்ளி நிர்வாகம் அமைய வேண்டும் (3) மாணாக்கர்கள் விளையாடுவதற்கு ஐந்து ஏக்கர் பரப்புள்ள ஆடுகளம் (Playground) இருத்தல் வேண்டும். 4) அரசுத் திட்டப்படி ஆசிரியர்களின் ஊதியத் திட்டங்கள் அமைதல் வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்திருந்தது கல்வித்துறை. இவற்றுள் ஒன்றுகூட நிறைவேற்றப்பெறாமல் உயர்நிலைப் பள்ளியாக வேண்டும் என்று நினைத்தால் அஃது எப்படிச் சாத்தியமாகும்?

நினைவு - 5 ; பள்ளி வளர்ச்சியில் முத்துவேங்கடாசலத் துரைக்கிருந்த அக்கறையை விட என்னுடைய அக்கறைதான் அதிகமாக இருந்தது என்பதை அப்போதே நான் அறிந்திருந்தேன். அவருடைய கவனம் எல்லாம் பெருநிலக்கிழவர் அரண்மனைக்குள் புகுந்து எப்படிச் சொத்துக்களைக் கைப்பற்றுவது என்பதில்தான் இருந்ததால், பகலெல்லாம் அரண்மனைக்கெதிரிலுள்ள பள்ளியின் மேல்மாடியில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தார். மரத்தில் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் பருந்தொன்று தரையில் நடமாடும் இரைகளை நோக்கிக் கொண்டிருப்பது போல் மாடி அறையிலிருந்து அரண்மனையை நோக்கிக் கொண்டிருந்தார்.

இரண்டாம் ஆண்டு (1942 பள்ளியின் தூல வளர்ச்சிக்குரிய பல செயல்களை மேற்கொண்டேன். ஒவ்வொரு செயலையும்