பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 87

முற்றுவிப்பது கடாமாட்டில் பால் கறப்பது போன்றிருக்கும் பால் கறப்பவன் பசுவிற்குச் சொரிந்து கொடுப்பது. புண்ணாக்குக் குழம்பு கொண்ட தவிடு, பருத்திக் கொட்டைக் கலவை ஊட்டுவது போன்ற செயல்களை மேற்கொள்வான். (1) கெஞ்சிக் கூத்தாடி ரூ 5000/வைத்தமா நிதியாக (Fixed Deposit) வங்கியில் போடச் செய்தது பெரும் பாடாயிற்று (2) திருச்சி துறையூர் நெடுஞ்சாலைக்குக் கீழ்ப்புறம் பத்து ஏக்கர் நிலம் வாங்கச் செய்தேன். இதற்கு செல்லி பாளையம் பெருமாள் ரெட்டியார் போன்ற அந்தரங்க அமைச்சர்களைக் கொண்டு இச்செயல் நிறைவேறியது சின்னதுரை சிக்கணக்காரர். கஞ்சப்பிரபு: பிசுநாரி என்று சொல்லும் அளவுக்கு மட்டமானவர், நான்கு சுவர்கட்குள் அடங்கியிருந்தாலும் இலெளகிகம் தெரிந்தவர்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்

என்ற திருக்குறள் கருத்தை நடைமுறைப் படுத்திக் காட்டியவர்.

ஆசிரியர் ஊதியத் திட்டத்தினால் மாற்றங்கள் செய்யப் பெற்றன. தலைமையாசிரியர் 65-2%-100. இடைநிலைப் பள்ளி ஆசிரியர் 30-2-40-1-50. தமிழாசிரியர் 35-3-45-1-50. ஒவிய ஆசியரியர் 25-2-35-1-40. உடற்பயிற்சி ஆசிரியர் 50-2-50 என்ற ஊதியத் திட்டத்தில் அமர்த்தப்பட்டனர். இத்திட்டத்தில் தலைமையாசிரியர். இடைநிலை ஆசிரியர்கள் இருவர். தமிழாசிரியர்கள் வாங்கும் ஊதியத்தில் பிடித்தம் இருந்தது - பிச்சைக்காரன் சோற்றில் சனீஸ்வரன் புகுந்தது போல இனி நிர்வாகக் குழு அமைப்பது ஒன்றுதான் செய்யப்படாதது.

நினைவு 6 : கல்வித்துறை விதித்த நிபந்தனைகளில் பெரும்பாலும் நிறைவேற்றப் பெற்றமையால், நான்காம் படிவம் தொடங்க முயற்சி எடுக்கும் திட்டத்தை சின்னதுரை முன் வைத்தேன் அவர் தயங்கினார் "நாங்கள் இருவரும் முயன்றபோதே

5 குறள் 517