பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நீங்காத நினைவுகள்

கிடைக்கவில்லை. இன்றும். அந்த நிலைதான் இருக்கும்" என்று மறுதலித்தார் "நடுநிலைப்பள்ளித் தொடங்குவதற்குக் கல்வித்துறை விதித்த நிபந்தனைகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாமல் முயன்றது தவறு: முயன்றது எனக்குத் தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்பேன்" என்றேன் "ஆம் நீங்கள் சொல்வதுதான் சரி. T.S. இராசகோபால அய்யரைக் கேட்டு அவர் சொல்படி விண்ணப்பம் அனுப்பினோம். அவர் மாவட்டக் கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் பார்த்துக் கொள்வதாகச் சொன்னதன் பேரில் அனுப்பினோம்" என்றார் "நான் இளைஞனாக இருந்தாலும் ஓராண்டு அநுபவத்தில் பல செய்திகளைத் தெரிந்து வைத்துள்ளேன். மாவட்டக் கல்வியதிகாரியின் அலுவலகத்தில் நடந்து கொள்ள வேண்டிய நெளிவு சுளிவுகளையெல்லாம் ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன்" என்றேன். 'நும் யோசனைப்படி எதையாவது செய்யும்: உரியவர்களைப் பார்க்க வேண்டுமானாலும் பாருங்கள்" என்று பச்சைக்கொடி காட்டி விட்டார்

என் மூளை செயற்படத் தொடங்கியது நடுநிலைப் பள்ளித் தொடங்குவதற்குக் கல்வித் துறையினர் போட்ட நிபந்தனைகள், அவை எந்த அளவுக்கு நிறைவேற்றப் பெற்றுள்ளன? என்பவற்றை முன்வைத்துக் கொண்டு திரு. கணபதி அய்யர் சொன்ன யோசனைகளையும் நினைவிற் கொண்டு அழகான முறையில் விண்ணப்பத்தை தயாரித்துக் கொண்டு முசிறி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திருவேங்கடம் பிள்ளையிடம் காட்டினேன். அவரும் அதில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சொற்களை மாற்றி அமைத்தும், பணித்துறை சார்ந்த பொருளற்ற சொற்களைப் புகுத்தியும் நகாஸ் வேலை செய்து சரியான விண்ணப்பமாக்கினார். அவரே தட்டச்சரை வரவழைத்து நல்ல தாளில் ஐந்து படிகள் எடுத்து உதவினார். அவற்றைச் சின்னதுரை தாளாளரிடம்)யிடம் காட்டிக் கையொப்பம் வாங்கி முதற்படியை முறைப்படி சென்னைக் கல்வித்துறை இயக்குநருக்கும். நகல்களை திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரிக்கும், கோவை மண்டல ஆய்வாளர் அகியோருக்கும் அனுப்பி வைக்கப் பெற்றன. தாளாளர் இரண்டாண்டுகட்கு முன்னர்