பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நீங்காத நினைவுகள்

வி.ஆர்.ஆர் : உற்சாகமுள்ள இளைஞராகக் காணப்படுகின்றீர்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன் நான்காம் படிவம் தொடங்கப் பரிந்துரை செய்தால் உங்களுகாகத்தான் செய்ய வேண்டும். உங்கள் பள்ளி நிர்வாகம் காலத்திற் கொவ்வாதது. உயர்நிலைத் தொடக்கப் பள்ளியிலேயே ஆசிரியர்கட்குச் சரியான ஊதியம் இல்லை அரசு, ஆசிரியர்கட்குத் தரும் மானியத்திற்குமேல் சிறிது கூடத் சேர்த்துத் தருவதில்லை. தலைமையாசிரியர்க்கே ரூ. 40/- எட்டவில்லை என்பதை அறிவேன். தொடக்கநிலைப் பள்ளியிலேயே அணா கணக்கில் கட்டணம் தண்டுகின்றனர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய்க் கணக்கில் தண்டுவார்கள். கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிப்பார்கள். இதைத்தான் நான் இன்று தனியார் பள்ளிகளில் காண்பது. உங்கட்குக்கூட ரூ. 65/- தர மாட்டார்கள். அது தருவதுதான் நியாயம். நான்காம் படிவம் வந்தால் ரூ. 110/= தருவார்களா? இப்போது உங்கள் ஊதியம் ரூ. 35/-க்கு மேல் இருக்காது என்பதை நான் ஊகித்து அறிவேன். நீங்களும் உண்மையை மறைப்பீர்கள். அப்படி ஏதாவது ரூ. 40- அல்லது ரூ. 45- ஆகத் தந்தால் ரூ. 10 ஆவது நீங்கள் திருப்பித்தரும் திட்டம் இருக்கும் உண்மைதானே ஏன் விழிக்கிறீர்கள்?

நான் : புன்முறுவல் செய்து வாளா இருந்தேன்.

வி.ஆர்.ஆர் . உங்களுக்காகவாவது நான்காவது பாரம் தொடங்கப் பரிந்துரைக்கின்றேன். மகிழ்ச்சியாகத் திரும்புங்கள்.

“வணக்கம் ஐயா, மிகவும் நன்றி" என்று கூறி விடைபெற்றேன் திரு. சாம்பசிவம் பிள்ளை உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அவர் வி.ஆர்.ஆரிடம் பேசி இரவு ஒன்பது மணிக்கு வெளி வந்தார். அவரிடம் பதினைந்து மணித்துளிகள் பேசிக் கொண்டிருந்தேன். "பள்ளி நிர்வாகம் அவருக்கு மனநிறைவுதராவிடில், பரிந்துரை செய்யார் இனிமையாகப் பேசியது உங்கட்கு மகிழ்ச்சி ஊட்டுவதற்காக, எதற்கும் நீங்கள் சென்னை சென்று அங்கும் முயற்சி செய்வது நல்லது. இஃது என் தனிப்பட்ட கருத்து. நீங்கள் துடிப்புடன் செயற்படுகின்றீர்கள் உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும்" என்று